உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகக் சிக்கல்களுக்கு மத்தியில், இயற்கை எரிவாயு ஒதுக்கீட்டிற்கு முன்னுரிமை அளிப்பதற்காக இந்திய அரசு 'இயற்கை எரிவாயு (வழங்கல் ஒழுங்குமுறை) ஆணை, 2026' என்பதை வெளியிட்டுள்ளது.
இந்த ஆணையின் கீழ், உர ஆலைகள் ‘முன்னுரிமைத் துறை-2’-இன் கீழ் கொண்டு வரப் பட்டுள்ளன என்பதோடு இது கடந்த ஆறு மாதங்களின் சராசரி விநியோகத்தின் அடிப்படையில் அவற்றுக்குக் குறைந்தது 70% இயற்கை எரிவாயு விநியோகத்தை உறுதி செய்கிறது.
உள்நாட்டு உர உற்பத்தியைப் பாதுகாப்பதையும், காரிஃப் பருவ விதைப்பு காலங்களில் விவசாயிகளுக்குப் போதுமான விநியோகம் கிடைப்பதை உறுதி செய்வதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உரத் துறையின் தரவுகளின் படி, 2026 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவின் மொத்த உர இருப்பு 180.12 லட்சம் மெட்ரிக் டன்களாக (LMT) உள்ளது என்பதோடு இது முந்தைய ஆண்டை விட சுமார் 36.6% அதிகமாகும்.