இயற்கை நடவடிக்கைகளுக்கானக் கடன் பரிமாற்ற முன்னெடுப்பு
July 28 , 2023 838 days 429 0
ஒரு மத்திய ஆப்பிரிக்க நாடான காபோன், இயற்கை நடவடிக்கைகளுக்கானக் கடன் பரிமாற்ற முன்னெடுப்பினைத் தொடங்கிய முதல் ஆப்பிரிக்க நாடாக மாறியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த நீலப் பத்திரத்திற்கு (சமூக மற்றும் நிலைத்தன்மை தாக்கப் பத்திரம்) ஈடாக குறைந்தபட்சம் 450 மில்லியன் டாலர் அரசுக் கடனை வாங்க திட்டம் இட்டுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உறுதி பூண்டுள்ள வளர்ந்து வரும் நாடுகளுக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் நிவாரணம் வழங்கும் செயல்முறை என்பது இயற்கை நடவடிக்கைகளுக்கானக் கடன் பரிமாற்ற முன்னெடுப்பு ஆகும்.