November 20 , 2026
10 hrs 0 min
44
- இயற்கை மருத்துவ முறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 1945 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று மகாத்மா காந்தி அகில இந்திய இயற்கை மருத்துவ அறக்கட்டளையின் வாழ்நாள் தலைவராகப் பொறுப்பேற்றதை இத்தினம் நினைவுகூருகிறது.
- மத்திய ஆயுஷ் அமைச்சகம் 2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இயற்கை மருத்துவ தினத்தைக் கொண்டாடி வருகிறது.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "பிராகிருதிக் சிகித்சா, ஸ்வஸ்த் பாரத்" ("இயற்கை மருத்துவம், ஆரோக்கியமான இந்தியா") என்பதாகும்.
- இதன் 9-ஆம் வருடக் கொண்டாட்டம் கர்நாடகாவின் நாகமங்கலத்தில் உள்ள மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் (CRIYN) நடைபெற்றது.
- இயற்கை மருத்துவம் என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்சபூதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
Post Views:
44