இயற்கை முறையில் உற்பத்திப் பொருட்களுக்கான ஒரு பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம்
July 23 , 2024 521 days 387 0
தேயிலை மற்றும் மருத்துவத் தாவரங்கள் உட்பட இயற்கை முறையில் உற்பத்தி செய்யப் படும் பொருட்களின் வர்த்தகத்தினை எளிதாக்குவதற்காக இந்தியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு ஒப்பந்தம் ஆனது நடைமுறைக்கு வந்துள்ளது.
பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் (MRA) எனப்படும் இது இரட்டைச் சான்றிதழ் வழங்கீட்டு முறைகளை தவிர்ப்பதன் மூலம் நன்கு இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் ஏற்றுமதியை எளிதாக்கும்.
இந்தியாவின் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மற்றும் தைவானின் வேளாண்மை மற்றும் உணவு முகமை ஆகியவை பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்தினைச் செயல்படுத்துவதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள முகமைகளாகும்.