இந்த அறிக்கையானது இயற்கை சார்ந்த தீர்வுகளுக்கான முதலீட்டு வரவுகளை மதிப்பீடு செய்கிறது.
மேலும், பருவநிலை மாற்றம், உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் நிலச்சீரழிவு (ரியோ உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட மூன்று இலக்குகள்) போன்றவற்றில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்குத் தேவையான வருங்கால முதலீடு போன்றவற்றை இது அடையாளம் கண்டறிகிறது.
இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம், உலகப் பொருளாதார மன்றம் மற்றும் நிலச் சீரழிவின் பொருளியல் (Economics of Land Degradation) எனும் அமைப்புகளால் ஒன்றிணைந்து உருவாக்கப் பட்டதாகும்.
இயற்கை சார்ந்த தீர்வுகள் (Nature Based Solutions) என்பவை சமூக-சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்காக இயற்கையினை நிலையான முறையில் மேலாண்மை செய்தல் மற்றும் நிலையான முறையில் பயன்படுத்துதல் என்பதாகும்.