நிதி ஆயோக் அமைப்பானது, "Chemical Industry: Powering India’s Participation in Global Value Chains" என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் வேதியியல் துறையானது பெரியது என்றாலும் உள்கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சவால்களுடன், ஆங்காங்கே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அமைந்து சிதறி உள்ளது.
உலகளாவிய வேதியியல் மதிப்புச் சங்கிலிகளில் இந்தியா சுமார் 3.5% பங்கை மட்டுமே கொண்டுள்ளது.
இறக்குமதியினைச் சார்ந்திருத்தல் காரணமாக 2023 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 31 பில்லியன் அமெரிக்க டாலர் இரசாயன வர்த்தகப் பற்றாக்குறையை எதிர்கொண்டது.
இந்தத் துறையை மேம்படுத்துவதற்காக வேண்டி நிதி மற்றும் நிதி சாராத பகுதிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
சீர்திருத்தங்களுடன், 2040 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வேதியியல் துறையினை கொண்டதாக மேம்பட முடியும்.
2040 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் (GVC) 12% பங்கைப் பெற்று இருப்பதையும், உலகளாவிய வேதியியல் உற்பத்தி ஆற்றல் கொண்ட ஒரு மையமாக மாறுவதையும் இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது.