இரசாயனப் போரினால் பாதிப்பிற்கு உள்ளான அனைவருக்குமான நினைவு தினம் – நவம்பர் 30
November 30 , 2020 1720 days 475 0
இந்தத் தினமானது இரசாயனப் போரினால் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு மரியாதை செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இது இரசாயன ஆயுதங்களின் ஒழிப்பிற்கு இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்காக இந்த அமைப்பின் பொறுப்பை உறுதி செய்கின்றது. இதன் மூலம் உலகில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பன்முகத் தன்மை போன்ற இலக்குகளை அடைய இது ஊக்குவிக்கின்றது.
ஐக்கிய நாடுகளினால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இது 2005 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இரசாயன ஆயுதங்களின் வளர்ச்சி, உற்பத்தி, குவித்தல் மற்றும் அதன் பயன்பாடு மீதான தடை மற்றும் அதன் அழிப்பு குறித்த ஒப்பந்தமானது 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 09 அன்று நடைமுறைக்கு வந்தது.