TNPSC Thervupettagam

இரட்டை ரோபோடிக் அறுவை சிகிச்சை

April 11 , 2026 15 hrs 0 min 57 0
  • சென்னையில் உள்ள ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை நிபுணர் 1,500 கி.மீ தொலைவில் இருந்து அறுவை சிகிச்சையை செய்த ரோபோடிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
  • இரைப்பை அமிலப் பின்னடைவு நோய் (GERD) பாதிப்புள்ள 23 வயது நோயாளிக்கு பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • வெவ்வேறு இடங்களில் உள்ள மருத்துவர்கள் இணைந்து செயல்பட அனுமதிக்கின்ற இரண்டு முனையங்களைக் கொண்ட ரோபோடிக் அமைப்பைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  
  • ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் வாபியிலிருந்து (குஜராத்) இயக்கிய அதே வேளையில், மற்றொருவர் சென்னையில் நிகழ்நேரத்தில் உதவினார்.
  • இதுவே இந்தியாவின் முதல் நீண்ட தூர இரட்டை-முனைய ரோபோடிக் தொலைதூர அறுவை சிகிச்சை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்