இரண்டாம் காலாண்டில் (2024-25) தமிழ்நாடு மாநில அரசின் கடன்கள்
July 3 , 2024 431 days 630 0
2024-2025 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 24,000 கோடி ரூபாய் கடன் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்காக, மாநில மேம்பாட்டுக் கடன்கள் (SDLs) எனப்படும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் மாநில அரசுச் சந்தையில் இருந்து கடன் வாங்குகிறது.
மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கான உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயித்து உள்ளது.
தமிழக அரசானது, மாநில நிதிநிலை அறிக்கையின் படி 2024-25 ஆம் நிதியாண்டில் மொத்தமாக 1,55,584.48 கோடி ரூபாய் கடன் பெற்று, 49,638.82 கோடி ரூபாயினைத் திருப்பிச் செலுத்த திட்டமிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்றைய நிலவரப் படி, நிலுவையில் உள்ள கடன் மதிப்பு ஆனது 8,33,361.80 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்ற நிலையில் இது 2024-25 ஆம் நிதியாண்டில் மொத்த உள்மாநில உற்பத்தியில் 26.41% ஆகும்.
இது நிதி ஆணையங்கள் வகுத்துள்ள அளவுகளுக்குள் உள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், தமிழக அரசானது 20,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.