ரியாத் தொடரின் ஒரு பகுதியாக 'இந்திய வாரம்' தொடங்கியதுடன், சவுதி அரேபியாவின் ஊடக அமைச்சகம் ஆனது இந்த நிகழ்வைத் தொடங்கியது.
இந்த முன்னெடுப்பானது, நாட்டின் குடியிருப்பாளர்களின் கலாச்சாரப் பன்முகத் தன்மையைக் கொண்டாடுவதோடு, அவர்களின் பங்களிப்புகள் மற்றும் சமூகத்தில் அவர்களின் ஒருங்கிணைப்பை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியக் கலாச்சாரம் மற்றும் இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான உறவுகளை இணைத்தல் ஆகியவற்றினை வெளிப்படுத்தும் இசை, நடனம், உணவு, கலை மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றினை உள்ளடக்கிய நிகழ்வுகளும் இதில் அடங்கும்.
இந்த நிகழ்வில், சவுதி தொலைநோக்கு கொள்கை 2030 திட்டத்தின் கீழ் உள்ளடக்கம், சகவாழ்வு மற்றும் பன்முக கலாச்சாரப் புரிதலை ஊக்குவிக்கின்ற 14 கலாச்சாரங்கள் இடம் பெறும்.