தெற்காசியப் பாதுகாப்பு உச்சி மாநாட்டின் இரண்டாவது பதிப்பானது புது தில்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் முகநூல் (FACEBOOK) நிறுவனம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது.
தனிநபர்களும் சமூகங்களும் டிஜிட்டல் தளத்தில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் “பாதுகாப்பு சார்ந்தப் பிரச்சினை” என்பதை முன்னிலைப்படுத்த இந்த உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி “வி திங்க் டிஜிட்டல் (We Think Digital)” என்ற வலைதளத்தை தொடங்கி வைத்தார்.
இந்த வலைதளம் ஆனது தனியுரிமை, பாதுகாப்பு, டிஜிட்டல் சொற்பொழிவு மற்றும் டிஜிட்டல் தடம் தெரிந்துகொள்வது ஆகியவைகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்நேர கல்வி வலைதளம் ஆகும்.