இரண்டாவது தேசிய செரோ ஆய்வானது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தினால் (ICMR - Indian Council of Medical Research) வெளியிடப்பட்டுள்ளது.
இது இரத்த மாதிரிகளை எடுப்பதன் மூலம் மேற்கொள்ளப் படுகின்றது. இது நோய்த் தொற்று ஏற்பட்டு 2 வாரத்திற்குள் காணப்படும் ஐஜிஜி (IgG) எனப்படும் சிறப்பு நோய் எதிர்ப்புப் பொருளின் ஒரு பிரிவைச் சோதனை செய்கின்றது.
ஏனெனில் நமது உடலில் அதற்கான நோய் எதிர்ப்புப் பொருள் எவ்வளவு காலம் இருக்கும் என்பது சரியாகத் தெரியவில்லை. அதன் இருப்பு வைரஸ் இல்லாததை அல்லது கடந்த காலங்களில் வைரஸ் தொற்று ஏற்பட்டதை மட்டுமே உறுதி செய்கின்றது.
மேற்கோள்கள்
ஆகஸ்ட் மாதத்தின் கடைசி 2 வாரங்கள் வரை ஏறத்தாழ 7% இந்தியப் பதின்ம வயது பருவத்தினர் கொரானா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
முதலாவது ஆய்வின் போது, இது ஒவ்வொரு உறுதி செய்யப்பட்ட கோவிட் – 19 பாதிப்பிற்கும் 82 – 130 என்ற அளவில் தொற்று இருந்தது. தற்பொழுது இது 26-32 என்ற அளவில் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கொரானா வைரஸ் பரவலானது அமெரிக்காவில் காணப்படும் அளவான 9.3% என்ற அளவில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றது.
பிரேசில் மற்றும் ஸ்பெயின் ஆகியவை முறையே 2.2% மற்றும் 4.6% என்ற அளவில் கொரானா வைரஸ் நோய் பரவலைக் கொண்டுள்ளன.