பணப்பரிமாற்றப் பாதுகாப்பை மேம்படுத்த, ஏப்ரல் 1, 2026 முதல் அனைத்து டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களுக்கும் இரண்டு அடுக்கு அங்கீகாரத்தை (2FA) இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.
இரண்டு அடுக்கு அங்கீகாரம் என்பது PIN (ரகசிய எண்), OTP (ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்) அல்லது பயோமெட்ரிக்/உயிரியளவியல் (கைரேகை/முகம் அடையாளம் காணுதல்) போன்ற இரண்டு வெவ்வேறு சரிபார்ப்பு முறைகளைப் பயன்படுத்துவதைக் குறிக்கும்.
குறைந்தபட்சம் ஒரு அங்கீகார முறையாவது OTP போன்ற மாறும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதோடுஇது ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் மாறுபடுவதால் இது பாதுகாப்பை அதிகரிக்கிறது.
இனி வரும் காலங்களில், PIN அல்லது OTP மட்டும் பயன்படுத்தும் ஒற்றை அடுக்கு அங்கீகார முறைகள் அனுமதிக்கப்படாது.
இந்த விதி UPI, பற்று மற்றும் கடன் அட்டைகள் மற்றும் அலைபேசி பணப்பைகள் உட்பட அனைத்து டிஜிட்டல் பணப்பரிமாற்ற அமைப்புகளுக்கும் பொருந்தும்.
அதிகரித்து வரும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற மோசடிகளைக் குறைப்பதும், சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து பயனர்களைப் பாதுகாப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.