TNPSC Thervupettagam

இரண்டு அடுக்கு சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு

September 8 , 2025 16 hrs 0 min 33 0
  • சரக்கு மற்றும் சேவை வரி (GST) சபையானது, அதன் 56வது கூட்டத்தில், 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் 5% மற்றும் 18% விகிதங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான இரண்டு அடுக்குக் கட்டமைப்பை அங்கீகரித்தது.
  • புகையிலை, பான் மசாலா, கார்பனேற்றப்பட்ட பானங்கள், படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பெரிய கார்கள் உள்ளிட்ட சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் (பாவ) மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு 40% “சிறப்பு வரி விகிதம்” அறிமுகப்படுத்தப்பட்டது.
  • சோப்பு, ஷாம்பு, பல் துலக்கும் தூரிகை, பற்பசை, இருசக்கர மிதிவண்டிகள் மற்றும் மேசைப் பயன்பாட்டுப் பாத்திரங்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 12% அல்லது 18% ஆக விதிக்கப்பட்டிருந்த வரி விகிதம் தற்போது குறைக்கப்பட்டு 5% வரி விதிக்கப்படுகிறது.
  • பாஸ்தா, உடனடி நூடுல்ஸ், சாஸ்கள், சாக்லேட்டுகள், காபி மற்றும் பேக் செய்யப்பட்ட நம்கீன்கள் போன்ற உணவுப் பொருட்கள் உயர் வரி விதிப்பு அடுக்குகளிலிருந்து 5% அடுக்கிற்கு மாற்றப்பட்டன.
  • ரொட்டிகள், சப்பாத்திகள், பரோட்டாக்கள் உள்ளிட்ட இந்திய ரொட்டிகள் (வெதுப்பி உணவுகள்), அதி-உயர் வெப்பநிலையிலான (UHT) பால் மற்றும் பன்னீர் ஆகியவை 5% வரி அடுக்கிலிருந்து 0% அடுக்கிற்கு மாற்றப்பட்டன.
  • 350cc வரை எஞ்சின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்கள், சிறிய கார்கள், காற்றுப் பதன் கருவிகள் (AC), தொலைக்காட்சிகள் மற்றும் பாத்திரம் கழுவும் இயந்திரங்களுக்கு தற்போது 18% வரி விதிக்கப்படுகின்றன என்பதோடு இது 28% அடுக்கிலிருந்து மாற்றப்பட்டுள்ளன.
  • வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளுக்கு பயன்படும் சிமெண்ட் 28% அடுக்கிலிருந்து 18% அடுக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
  • பேருந்துகள், லாரிகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அனைத்து ஆட்டோ பாகங்களுக்கு தற்போது ஒரே மாதிரியாக 18% வரி விதிக்கப்பட்டுள்ளன.
  • 33 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் நோயறிதல் கருவிகள் தற்போது 0% வரி அடுக்கிற்கும் (12% அடுக்கிலிருந்து மாற்றம்); கண்ணாடிகள் 28% அடுக்கிலிருந்து 5% அடுக்கிற்கும் மாற்றப் பட்டுள்ளன.
  • உயிரிப் பூச்சிக்கொல்லிகள், உயிரி-மெந்தால், கைவினைப் பொருட்கள், பளிங்கு மற்றும் கிரானைட் அமைப்புகளுக்கு தற்போது 5% வரி விதிக்கப்பட்டுள்ளன என்ற நிலையில் இது 12% அடுக்கிலிருந்து மாற்றப்பட்டுள்ளது.
  • மனிதனால் உருவாக்கப்பட்ட இழை மீதான வரியை 18 சதவீதத்திருந்து 5% ஆகவும், மனிதனால் உருவாக்கப்பட்ட நூல் மீதான வரியை 12 சதவீதத்திருந்து 5% ஆகவும் குறைப்பதன் மூலம் ஜவுளித் துறையில் தலைகீழ் வரி அமைப்பு சரி செய்யப்பட்டது.
  • சல்பூரிக் அமிலம், நைட்ரிக் அமிலம் மற்றும் அம்மோனியா போன்ற உர உள்ளீடுகளுக்கு தற்போது 18% வரிக்குப் பதிலாக 5% வரி விதிக்கப்படுகின்றன என்பதோடு இது விவசாயச் செலவுகளைக் குறைக்கிறது.
  • நிதிப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்காக தனிநபர் ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டுக் கொள்கைகளுக்கு விதிக்கப்பட்ட 18% வரி தற்போது 0% ஆக மாற்றப் பட்டுள்ளது.
  • புகையிலை, பான் மசாலா, குட்கா, சிகரெட், ஜர்தா மற்றும் பீடி மீதான 28% GST + இழப்பீட்டு வீத வரியானது, மத்திய அரசு வீத வரி தொடர்பான கடன்களை திருப்பிச் செலுத்தும் வரை தொடரும்.
  • 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இழப்பீட்டு வீத வரி மீதான கடன் மற்றும் வட்டிப் பொறுப்புகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் இந்தப் புகையிலை தொடர்பான பொருட்கள் 40% வரி அடுக்குக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இணக்கம் மற்றும் வரி வருவாய் மற்றும் GDP இடையிலான தொடர்பு ஆகியவற்றில் எதிர்பார்க்கப் படும் முன்னேற்றத்துடன், 2023–24 ஆம் ஆண்டின் நுகர்வு அடிப்படையில் விகிதக் குறைப்புகளால் 48,000 கோடி ரூபாய் வருவாய் பாதிப்பு மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்