உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான இரண்டு குழந்தைகள் விதிமுறையை ரத்து செய்யும் மசோதாவை தெலுங்கானா சட்டமன்றம் நிறைவேற்றி உள்ளது.
1994 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட முந்தையச் சட்டம், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்ற வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தது.
இந்தப் புதிய சட்டம் தெலுங்கானா பஞ்சாயத்து ராஜ் (திருத்தம்) மசோதா, 2026 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மசோதா, இதே விவகாரத்தில் வெளியிடப்பட்ட முந்தைய அவசரச் சட்டத்திற்கு மாற்றாக அமைகிறது.
இந்த மசோதாவை பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தனசாரி அனசுயா சீதக்கா அறிமுகப் படுத்தினார்.
இந்தத் திருத்தம், குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், அனைத்து தகுதியுள்ள குடிமக்களும் அங்குள்ள பஞ்சாயத்து ராஜ் தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கிறது.