சென்னையில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் (ZSI) கடல் உயிரியல் மண்டல மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மணற்கெளுத்தி மற்றும் மின்சாரத் திருக்கை ஆகிய இரண்டு புதிய கடல் மீன் இனங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
மணற்கெளுத்தி என்பது ஆழமற்ற கடல்களில் மணல் அல்லது பாறைகளின் மீது காணப்படும் ஒரு அடிமட்ட மீன் ஆகும். இது ஓட்டுடலிகள், பலவகைப்புழுக்கள் மற்றும் இளம் மீன்களை உணவாக உட்கொள்கிறது.
மின்சாரத் திருக்கை, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழமான பகுதிகளில் கண்டறியப்பட்டது; ஆராய்ச்சியாளர்களால் நான்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இந்த மாதிரிகள் சென்னை, தீகா, விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடா கடற்பரப்பில் 30-80 மீட்டர் ஆழத்தில் இருந்து சேகரிக்கப்பட்டன.
இந்தியாவின் கிழக்கு கண்டத்திட்டுப் பகுதியில் உள்ள அடிமட்ட மீன்களின் பன்முகத் தன்மை இன்னும் போதுமான அளவு ஆராயப்படவில்லை என்பதை இந்தக் கண்டுபிடிப்பு காட்டுகிறது.
இந்தியக் கடற்பரப்பில் இதுவரை 17 வகையான மணற்கெளுத்தி இனங்கள் கண்டறியப் பட்டுள்ளன.