TNPSC Thervupettagam

இரண்டு புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் – புதுச்சேரி

June 1 , 2026 9 days 132 0
  • முதலீடு, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காகப் புதுச்சேரியில் இரண்டு புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (SEZs) மத்திய அரசு அறிவித்து உள்ளது.
  • ₹725 கோடி முதலீட்டில் தட்டாஞ்சாவடியில் உழவர்கரை நகராட்சியால் தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (IT/ITES) சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும்.
  • இது ஒரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பால் (நகராட்சி) உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலமாக இருக்கும் என்பதுடன் மேலும் இது சுமார் 3,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.
  • ₹1,250 கோடி முதலீட்டில் கரசூர் கிராமத்தில் புதுச்சேரி தொழில் மேம்பாட்டு மற்றும் முதலீட்டுக் கழகத்தால் (PIPDIC) ஒரு பல்நோக்கு துறை சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்படவுள்ளது.
  • இத்திட்டங்கள் தமிழ்நாடு - அந்தமான் மற்றும் புதுச்சேரி (TAP) பிராந்தியத்தில் தொழில்துறை வளர்ச்சி, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த மேம்பாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்