TNPSC Thervupettagam

இரண்டு புதிய சிலந்தி இனங்கள் கண்டுபிடிப்பு

July 24 , 2026 4 days 58 0
  • இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தைச் (ZSI) சேர்ந்த அறிவியலாளர்கள் மேகாலயா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் சிமோனியா லாபா (Simonia lawbah) மற்றும் ஹமடலிவா பாபிகொண்டா (Hamataliwa papikonda) ஆகிய இரண்டு புதிய சிலந்தி இனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
  • சிமோனியா லாபா என்பது மேகாலயாவில் உள்ள கிரெம் லாபா குகையில் காணப் பட்ட தேரிடியோசோமாடிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதிய குகைவாழ் ரே (ray) சிலந்தி ஆகும்.
  • இந்தியாவில் சிமோனியா பேரினத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் இனம் இதுவாகும்.
  • ஹமடலிவா பாபிகொண்டா என்பது ஆந்திரப் பிரதேசத்தின் பாபிகொண்டா தேசியப் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆக்ஸியோபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதிய லின்க்ஸ் (lynx) வகை சிலந்தி ஆகும்.
  • ஆந்திரப் பிரதேசத்தில் ஹமடலிவா பேரினத்தில் ஆவணப்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்