இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தைச் (ZSI) சேர்ந்த அறிவியலாளர்கள் மேகாலயா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் சிமோனியா லாபா (Simonia lawbah) மற்றும் ஹமடலிவா பாபிகொண்டா (Hamataliwa papikonda) ஆகிய இரண்டு புதிய சிலந்தி இனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
சிமோனியா லாபா என்பது மேகாலயாவில் உள்ள கிரெம் லாபா குகையில் காணப் பட்ட தேரிடியோசோமாடிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதிய குகைவாழ் ரே (ray) சிலந்தி ஆகும்.
இந்தியாவில் சிமோனியா பேரினத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் இனம் இதுவாகும்.
ஹமடலிவா பாபிகொண்டா என்பது ஆந்திரப் பிரதேசத்தின் பாபிகொண்டா தேசியப் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆக்ஸியோபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதிய லின்க்ஸ் (lynx) வகை சிலந்தி ஆகும்.
ஆந்திரப் பிரதேசத்தில் ஹமடலிவா பேரினத்தில் ஆவணப்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும்.