அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டு புதிய தவளை இனங்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இரண்டு இனங்களும் மெகோஃப்ரிடே குடும்பத்தின் கீழ் லெப்டோபிராச்சியம் இனத்தைச் சேர்ந்தவை.
இந்தியாவின் தவளை மனிதன் என்றும் அழைக்கப் படும் டெல்லி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் S. D. பிஜு இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
புதிதாக அடையாளம் காணப்பட்ட இத்தவளைகள் சோமனின் மெலிந்த கை தவளை (லெப்டோ பிராச்சியம் சோமன்) மற்றும் மெச்சுகா மெலிந்த கை தவளை (லெப்டோ பிராச்சியம் மெச்சுகா) ஆகும்.