ஐரோப்பிய தெற்கு ஆய்வகம் (ESO) ஆனது ஒரு வெண்ணிறக் குறு நட்சத்திரத்தில் இரட்டை வெடிப்பு நிகழ்ந்ததற்கான முதல் காட்சிப் பூர்வ ஆதாரத்தைக் கண்டறிந்து உள்ளது.
மீவொளிர் விண்முகிலின் (சூப்பர்நோவா) ஒரு எஞ்சிய பாகமான SNR 0509-67.5 ஆனது 160,000 ஒளி ஆண்டுகளுக்கு மேலான தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கண்டறிதல் ஆனது மிகப் பெரிய தொலைநோக்கி (VLT) மற்றும் பல்லடுக்கு நிற மாலையியல் ஆய்வுக் கருவி (MUSE) ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் பட்டது.
அறிவியலளர்கள் அந்த நட்சத்திரம் ஒரு முறை அல்ல, இரண்டு முறை வெடித்த ஓர் அரிய அண்ட நிகழ்வினை உறுதிப்படுத்துகின்றனர்.
முந்தைய ஒரு கருதுகோள் என்னவென்றால், வெண்ணிறக் குறு நட்சத்திரங்கள் ஆனது சந்திரசேகர் வரம்பைத் தாண்டிய பின்னரே வெடிக்கும் (சூரியனின் நிறை 1.4 மடங்கு).
வெண்ணிறக் குறு நட்சத்திரங்கள் அருகிலுள்ள நட்சத்திரத்திலிருந்து ஹீலியத்தைக் கைப்பற்றி, முதல் வெளிப்புற வெடிப்பை ஏற்படுத்தியது.
முதல் வெடிப்பு உள்நோக்கி ஒரு அதிர்ச்சி அலையை அனுப்பி, அதன் மையத்தை வெப்பமடையச் செய்து இரண்டாவது வெடிப்பை ஏற்படுத்தியது.
முதல் வகை மீவொளிர் விண்முகில் ஆனது ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் தரவு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.