இரண்டுக் கப்பல்களுக்குப் பிரியாவிடை
June 7 , 2022
1159 days
514
- இந்தியக் கடற்படையானது, அதன் இரண்டுக் கப்பல்களான ஐஎன்எஸ் நிஷாங்க் மற்றும் ஐஎன்எஸ் அக்சய் ஆகியவற்றிற்குப் பிரியாவிடை அளித்தது.
- இரண்டுக் கப்பல்களும் 32 ஆண்டுகாலச் சேவைக்குப் பிறகு, கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் படையிலிருந்து விலக்கப்படும்.
- அனைத்துக் கடற்படையினரும் தங்கள் கப்பல்களின் பெயர்களைத் தங்கள் சொந்த அடையாளமாக கொண்டுள்ளனர்.
- ஐஎன்எஸ் நிஷாங்க் என்பது வீர் ரக ஏவுகணைப் பாதுகாப்பு கப்பல் வரிசையில் உருவாக்கப் பட்ட நான்காவது கப்பல் ஆகும்.
- மேலும், 1971 ஆம் ஆண்டு போரில் வீரதீரச் செயலிற்குப் பெயர் பெற்ற கில்லர் படைப் பிரிவின் ஒருங்கிணைந்தப் பகுதியாக இது விளங்கியது.
- ஐஎன்எஸ் அக்சய் என்பது 23வது ரோந்துக் கப்பல் படையின் ஒரு பகுதியாகும்.
- இதன் முதன்மைப் பணி நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு மற்றும் கடலோர ரோந்து ஆகும்.

Post Views:
514