TNPSC Thervupettagam

இரத்த சோகை இல்லா பாரத (Anaemia Mukt Bharat) உத்திசார் திட்டம்

October 30 , 2026 14 hrs 0 min 39 0
  • இரத்த சோகைத் தடுப்பு, பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய அரசாங்கம் அனீமியா முக்த் பாரத் (AMB) திட்டத்தை 7×7×7 உத்தியாகத் திருத்தியமைத்தது.
  • இத்திட்டம் 2018 ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப் பட்டது.
  • அனீமியா முக்த் பாரத் திட்டமானது குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மற்றும் பெண்களிடையே இரத்த சோகையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது; அதன் பாரம்பரிய 6×6×6 உத்தியானது ஆறு பயனாளிகள் குழுக்கள், ஆறு தலையீடுகள் மற்றும் ஆறு நிறுவன வழிமுறைகளை உள்ளடக்கியது.
  • திருத்தப்பட்ட 7×7×7 உத்தியானது ஏழு பயனாளிகள் குழுக்கள், ஏழு தலையீடுகள் மற்றும் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலச் சேர்க்கை, பரிசோதனை மற்றும் சிகிச்சை, குடற்புழு நீக்கம், விழிப்புணர்வு மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு உள்ளிட்ட ஏழு நிறுவன வழிமுறைகளை உள்ளடக்கியது.
  • இரட்டைச் செறிவூட்டப்பட்ட உப்பானது (DFS) இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை மற்றும் அயோடின் குறைபாட்டுக் கோளாறுகளைத் தடுக்க உதவும் இரும்பு மற்றும் அயோடின் ஆகிய தாதுக்களைக் கொண்டுள்ளது; அயோடின் இயல்பான தைராய்டு செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • இரத்த சோகை பாதிப்பானது இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களையும், முக்கால்வாசி குழந்தைகளையும் பாதிக்கிறது; பெங்களூரு, டார்ஜிலிங், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இரும்புச்சத்து நிலை மேம்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இரட்டைச் செறிவூட்டப்பட்ட உப்பு (DFS) இரத்த சோகையை 21% வரை குறைக்க முடியும் என உலகளாவிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
  • அரசுத் திட்டங்கள் நான்கு மாநிலங்களில் உள்ள சுமார் 76 மில்லியன் மக்களுக்கு DFS உப்பை விநியோகிக்கின்றன; எனினும் சுமார் 800 மில்லியன் மக்களுக்குச் சேவை செய்யும் பொது விநியோக முறையின் (PDS) மூலம் இது பரவலாக விநியோகிக்கப்படுவது சமமற்ற நிலையிலேயே உள்ளது.
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) DFS தரநிலைகளை வெளியிட்டுள்ளது; DFS உப்பானது இரும்புச்சத்து சேர்க்கை, உணவு மேம்பாடு மற்றும் தாலசீமியா மற்றும் அரிவாள் செல் நோய் போன்ற குறைபாடுகளுக்கான பரிசோதனைக்குத் துணையாகச் செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்