இரத்தக் கசிவினைக் கட்டுப்படுத்தும் கட்டுத்துணிப் பட்டை
January 24 , 2023 845 days 422 0
அறிவியலாளர்கள், இரத்தக் கசிவினைக் கட்டுப்படுத்தும் துணிப்பட்டை வடிவிலான உயிரி பாலிமர் அடிப்படையிலான கூழ்மக் கலவை மற்றும் கட்டுத்துணிகளைத் தயாரித்துள்ளனர்.
இரத்தக் கசிவை கட்டுப்படுத்துவதற்கு வேண்டி ஒரு பயனுள்ள மற்றும் பாதுகாப்பான கட்டுத்துணிகள் தேவைப்படுவது அவசியமான ஒன்றாகும்.
காயங்களை ‘ஹீமோஹால்ட்’ இந்தத் துணிகளைக் கொண்டு கட்டினால், மூன்று நிமிடங்களில் அதிக இரத்தப் போக்கு நிறுத்தப் படும்.
இது சிகிச்சை அளிப்பதற்கு முன்பு ஏற்படும் இரத்த இழப்பைக் குறைத்து உயிர்களைக் காப்பாற்றும் மற்றும் போர்க்களத்தில் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும்.
இந்த கட்டுத்துணியானது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான MACS-அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.