TNPSC Thervupettagam

இரத்தம் உறையாமை நோய்க்கு மரபணு சிகிச்சை

July 19 , 2025 2 days 15 0
  • இந்திய அறிவியலாளர்கள் இரத்தம் உறையாமை நோய்க்கு புதிய மரபணு சிகிச்சை முறையை உருவாக்கியுள்ளனர்.
  • ஹீமோபிலியா ஏ என்பது ஒரு தவறான மரபணுவின் விளைவாக ஏற்படும் ஓர் அரிய மரபணு பாதிப்பு நிலையாகும்.
  • இது மிகவும் கடுமையான, தன்னிச்சையான மற்றும் ஆபத்தான இரத்தப் போக்குப் பாதிப்புகளைத் தூண்டுகிறது.
  • தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து நோயாளில் மட்டுமே இந்த நிலை காணப்படுவதாகக் கண்டறியப் பட்டாலும், அவர்களில் யாரும் சராசரியாக 14 மாத காலப் பகுதியில் இரத்தப் போக்கு பாதிப்புகளைக் கொண்டிருக்கவில்லை.
  • இரத்தம் உறையாமை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாராந்திர இரத்தப்போக்கு பாதிப்புகள் இருப்பது அசாதாரணமானது அல்ல, அதற்கு அடிக்கடி சிகிச்சை தேவைப் படுகிறது.
  • இந்த சிகிச்சையில் உடலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மரபணு, அத்தகைய இரத்தப்போக்கைத் தடுக்கக்கூடிய போதுமான ஒரு உறைதல் காரணியை உருவாக்க கற்றுக் கொடுக்கிறது.
  • பாதிக்கப் பட்டவர்களில் உள்ள உறைதல் காரணியின் சதவீதத்தைப் பொறுத்து இரத்தம் உறையாமை பாதிப்பு சிறியதாகவோ அல்லது கடுமையானதாகவோ வகைப் படுத்தப் படும்.
  • இந்த நிலையின் மிகவும் பொதுவான பதிப்பான ஹீமோபிலியா ஏ, காரணி VIII எனப் படும் இரத்த உறைதல் காரணி இல்லாததால் ஏற்படுகிறது.
  • இரத்தம் உறையாமை பாதிப்பு ஓர் அரியக் கோளாறு என்றாலும், 40,000 முதல் 100,000 நோயாளிகளுடன் இந்தியாவில் உலகின் இரண்டாவது மிகவும் பெரிய நோயாளிகள் எண்ணிக்கை உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் வணிகப் பயன்பாட்டிற்காக என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ரோக்டேவியன் என்ற ஒரே ஒரு மரபணுச் சிகிச்சை மட்டுமே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்