இரத்தம் சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்களுக்கான இட ஒதுக்கீடு
December 26 , 2023 592 days 321 0
தலாசீமியா, இரத்தம் உறையாமை நோய் மற்றும் அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் போன்ற இரத்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் பிரிவின் கீழ் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு பெறத் தகுதியற்றவர்கள் ஆவர்.
2016 ஆம் ஆண்டின் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த மூன்று நோய்களும் மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால், 2016 ஆம் ஆண்டு சட்டத்தின் 34வது பிரிவின்படி, மேற்கூறிய பிரிவினர் அரசு நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டினைப் பெறத் தகுதி அற்றவர்கள் ஆவர்.
பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பல குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 4% இடஒதுக்கீடு கிடைக்கப் பெறுகிறது.