இரயில் தண்டவாளத்தின் மேலே அமைந்த இந்தியாவின் முதல் 5 நட்சத்திர தங்கும் விடுதி
July 17 , 2021 1485 days 563 0
புனரமைக்கப்பட்ட காந்தி நகர் இரயில் நிலையத்தின் மேல்பகுதியில் புதிதாக கட்டப் பட்டுள்ள ஒரு 5 நட்சத்திர தங்கும் விடுதியினைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்தத் திட்டமானது 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்திய இரயில்வே நிலையங்கள் மேம்பாட்டுக் கழகத்தினால் தொடங்கப்பட்டது.
இந்தத் தங்கும் விடுதியானது மகாத்மா மந்திரில் நடைபெறும் கருத்தரங்கம் மற்றும் மாநாடுகள் ஆகியவற்றில் பங்கேற்க வருகை தரும் தேசிய மற்றும் பன்னாட்டு விருந்தினர்களுக்குத் தங்கும் இட வசதியை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும்.
மகாத்மா மந்திரானது இந்த விடுதிக்கு எதிரே அமைந்துள்ள ஒரு மாநாட்டு மையம் ஆகும்.