கூகிள் இந்தியா நிறுவனமானது தனது இரயில் நிலைய வைஃபை திட்டத்தை (கம்பியில்லா தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பத் திட்டத்தை) முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
கூகிள், இந்தியன் ரயில்வே மற்றும் ரெயில்டெல் ஆகிய நிறுவனங்களால் இத்திட்டமானது 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்டது.
இது இந்தியாவின் மக்கள் பயன்பாடு அதிகம் கொண்ட 400 ரயில் நிலையங்களில் அதிவேக மற்றும் பாதுகாப்பான இணைய இணைப்பைக் கொண்டு வர முயன்றது.