இரயில் பாதைகளில் யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கான ஒரு நிரந்தர அமைப்பு
April 1 , 2022 1228 days 500 0
இரயில்பாதைகளில் யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்காக வேண்டி, இரயில்வே அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றை உள்ளடக்கிய நிரந்தர ஒருங்கிணைப்புக் குழு ஒன்றினை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்துள்ளது.
இந்தியா முழுவதும், 2018-19 ஆம் ஆண்டில் 19 யானைகளும், 2019-20 ஆம் ஆண்டில் 14 யானைகளும், 2020-21 ஆம் ஆண்டில் 12 யானைகளும் இரயில்பாதைகளில் விபத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளன.
யானைகளின் இயற்கைக்கு புறம்பான உயிரிழப்பிற்கான 2வது மிகப்பெரிய காரணம் இரயில் பாதைகளில் ஏற்படும் விபத்துகளேயாகும்.