இந்திய இரயில்வே அமைச்சகம் ஆனது, 2030 ஆம் ஆண்டிற்குள் கார்பன் நடுநிலைத் தன்மைக் கொண்டதாக மாறுவதற்காக வேண்டி ஐந்து அம்சத் திட்டத்தினை வெளிக் கொணர்ந்துள்ளது.
திறம் மிக்கச் செயல்பாடுகள் மூலம் ஆற்றல் நுகர்வைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டை அதிகரிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அனைத்து இரயில்வே நிர்வாக அமைப்புகளிலும் சூரியசக்தி உற்பத்திக்கான தகடுகள் கொண்ட மேற்கூரையினை நிறுவுவது இத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.