TNPSC Thervupettagam

இரயில்வேயின் அதிகபட்ச வேகம்

January 15 , 2021 1615 days 610 0
  • மத்திய இரயில்வேத் துறை அமைச்சகமானது 1280 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு மணி நேரத்திற்கு 130 கிலோ மீட்டர் வேகம் என்ற அளவில் இந்திய இரயில்களின் வேகததைக் கணிசமாக அதிகரித்துள்ளது.
  • இந்த அதிகரிப்பானது தங்க நாற்கரம் – தங்க எதிர்கோண வழிப் பாதையில் (GQ – GD) 1612 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • குறிப்பிடப்பட்டுள்ள இந்த வழித்தடமானது துவ்வாடா - விஜயவாடா பிரிவைத் தவிர தெற்கு மத்திய இரயில்வேயில் உள்ள GQ – GD பாதை முழுவதையும் உள்ளடக்க உள்ளது.
  • தங்க நாற்கரத் திட்டம் (GQ – Golden Quadrilateral) என்பது இந்தியாவின் மிக முக்கியமான தொழிற்துறை, வேளாண் மற்றும் கலாச்சார மையங்களை இணைக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைப்பாகும்.
  • இது இந்தியாவின் 4 மிக முக்கிய மெட்ரோ நகரங்களான தில்லி (வடக்கு), கொல்கத்தா (கிழக்கு), மும்பை (மேற்கு), சென்னை (தெற்கு) ஆகியவற்றை இணைத்து நாற்கர வடிவத்தை உருவாக்குகின்றது.
  • இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய நெடுஞ்சாலைத் திட்டம் மற்றும் உலகின் 5வது மிகப்பெரிய திட்டம் இதுவாகும்.
  • இந்திய இரயில்வேயின் 18 மண்டலங்களில் தெற்கு மத்திய இரயில்வேயும் ஒன்றாகும்.
  • இது தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது.
  • இதன் தலைமையகம் செகந்திராபாத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்