TNPSC Thervupettagam

இரவு நேரங்களில் இயங்கலை வழி விளையாட்டுகளுக்கு தடை

June 6 , 2025 47 days 67 0
  • நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான நேரத்தில் பணத்தினை வைத்து விளையாடும் விளையாட்டுகளை (RMG) விளையாடுவதற்கு தமிழ்நாடு இயங் கலை வழி விளையாட்டு ஆணையம் (TNOGA) விதித்த ஒரு தடையின் செல்லுபடித் தன்மையினை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
  • இது RMG விளையாடுவதற்கு கட்டாய ஆதார் சரிபார்ப்பு போன்ற நிபந்தனைகளில் தலையிடவும் மறுத்து விட்டது.
  • அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் இரண்டாவது (மாநிலப் பட்டியல்) பட்டியலில் 6வது தலைப்பு (பொது சுகாதாரம் மற்றும் துப்புரவு) மற்றும் 26வது தலைப்பு (மாநிலத்திற்குள் வர்த்தகம் மற்றும் வணிகம்) ஆகியவற்றைப் பயன்படுத்தி இயங் கலை வழி விளையாட்டுகளை நிர்வகிக்கும் இச்சட்டத்தினை இயற்ற மாநிலச் சட்ட மன்றம் முழு அதிகாரம் கொண்டது என்றும் இந்த அமர்வு கூறியது.
  • 2025 ஆம் ஆண்டு விதிமுறைகள் ஆனது மிகவும் அதிகரித்து வரும் பொது சுகாதார நெருக்கடிக்கு அவசியமான நடவடிக்கை என்றும், DPSP விதிமுறைகளின் 39 சரத்துடன் ஒன்றிப் போவதாகவும் நீதிமன்றம் முடிவு செய்தது.
  • இதில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் நியாயமான கட்டுப்பாடுகள் என்றும், அரசியலமைப்பின் 19(2) மற்றும் 19(6) சரத்துகளின் கீழ் அவை பாதுகாக்கப்படுகின்றன என்றும் அரசாங்கம் வாதிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்