TNPSC Thervupettagam

இராஜ நாகங்களின் மறு அறிமுகம் - மத்தியப் பிரதேசம்

June 24 , 2025 177 days 298 0
  • மங்களூர் மிருகக்காட்சி சாலையில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்கு கொண்டு வரப் பட்ட இரண்டு இராஜ நாகங்களில் ஒன்று வான் விஹார் தேசியப் பூங்காவின் பாம்புகள் காப்பகத்தில் உயிரிழந்தது.
  • இராஜ நாகம் ஆனது அந்த மாநிலத்தில் காணப்படும் இனம் அல்ல.
  • உலகின் மிகவும் நீளமான விஷப் பாம்பான இராஜ நாகம் 15 அடி நீளம் வரை வளரக் கூடியது.
  • இது மிக ஈரப்பதமான, அடர்ந்த அடிமரங்களுடன் கூடிய இருண்ட காடுகள், குளிர்ந்த சதுப்பு நிலங்கள் மற்றும் பல்வேறு வாழ்விடங்களில் உள்ள சில மூங்கில் திட்டுகளில் வாழ்கிறது.
  • அவை உயர்ந்த பசுமை மாறாக் காடுகள் மற்றும் பகுதியளவு பசுமை மாறா காடுகள் முதல் அதிக மழைப் பொழிவு கொண்ட கழிமுகச் சதுப்பு நிலங்கள் வரையிலான பல பகுதிகளில் பரவிக் காணப்படுகின்றன.
  • இந்தியாவில், இராஜ நாகத்தின் வாழ்விட வரம்பில் மேற்குத் தொடர்ச்சி மலைகள், வட இந்திய தராய் (தாழ் நிலம்) மண்டலம், வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடற்கரைகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகள் ஆகியவை அடங்கும்.
  • இராஜ நாகங்கள் அவற்றின் மிகத் தனித்துவமான கூடு கட்டும் நடத்தைக்குப் பெயர் பெற்றவை.
  • இருப்பினும், அவை செயற்கையாக அடைக்கப் பட்டிருக்கும் இடங்களில் ஒரு சரியான முறையில் / நன்றாக இனப்பெருக்கம் செய்யாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்