இராஜஸ்தானில் உள்ள பமன்வாஸ் கங்கர் கிராமப் பஞ்சாயத்து, மாநிலத்தின் முதல் முழுமையான இயற்கை வேளாண் பஞ்சாயத்தாக மாறியது.
கோட்புட்லி-பெஹ்ரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பஞ்சாயத்து ஏழு குக்கிராமங்களைக் கொண்டுள்ளது.
இயற்கை உரங்கள், தழைக் கூளம், பயிர் சுழற்சி மற்றும் உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்துவதுடன் அனைத்து வேளாண் நிலமும் தற்போது இரசாயனம் இல்லாததாக மாறியுள்ளது.
கால்நடைகள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நலன் சார்ந்த நடைமுறைகளைப் பின்பற்றி வளர்க்கப்படுகின்றன.
ஜனவரி 2, 2026 அன்று, இரசாயனம் இல்லாத வேளாண்மையை பராமரிப்பதாக இந்தப் பஞ்சாயத்து பகிரங்கமாக உறுதியளித்தது.
2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இராஜஸ்தானில் உள்ள 300 பஞ்சாயத்துகளில் இதனை அமல்படுத்துவதை ஊக்குவிப்பதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டு உள்ளது.