உச்ச நீதிமன்றக் குழுவானது, மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள கான மயில் (GIB) இனத்தைப் பாதுகாப்பதற்காக இராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் சிறப்பு மின்சார வழித் தடங்களை அமைக்க பரிந்துரைத்தது.
கானமயில்கள் பெரும்பாலும் மேல்நிலை மின் இணைப்புகளில் மோதி இறக்கின்றன என்பதால் இந்தத் திட்டமானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியை இந்தப் பறவைகளின் வளங்காப்புடன் சமநிலைப்படுத்துகிறது.
வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு, கடத்தல் மற்றும் குறைந்த இனப்பெருக்கம் காரணமாக சுமார் 150 கானமயில்கள் மட்டுமே காடுகளில் உள்ளன.
ஆண்டுதோறும் 4 முதல் 5 பறவைகளின் உயிரிழப்பு கூட, அடுத்த 20 ஆண்டுகளில் அந்த இனத்தின் முழு அழிவுக்கு வழி வகுக்கும் என்று இந்திய வனவிலங்கு நிறுவனம் எச்சரித்தது.
இராஜஸ்தானில் சுமார் 80 கி.மீ நீளமுள்ள மின்சார வழித்தடங்களை நிலத்தடியில் அமைக்கவும், கானமயில் வாழும் மண்டலங்களுக்கு அருகிலுள்ள மிகவும் ஆபத்தான பகுதிகளை வேறு பாதைக்கு மாற்றவும் குழு பரிந்துரைத்தது.
இங்கு திருத்தப்பட்ட முன்னுரிமைப் பகுதிகள் இராஜஸ்தானில் சுமார் 14,013 சதுர கி.மீ மற்றும் குஜராத்தில் 740 சதுர கி.மீ எனக் குறிக்கப் பட்டன.
பறவைகள் இறப்பைக் குறைக்க நிலத்தடி அல்லது மின்கடத்தாப் பொருட்களால் சுற்றப் பட்ட மின் இணைப்புகளை அமைப்பதற்கான பகுதிகளை ஒரு கூட்டுக் குழு அடையாளம் காணும்.