மத்திய அரசானது, முழுநேர நிதி ஆயோக் உறுப்பினரும் முன்னாள் அமைச்சரவை செயலாளருமான இராஜீவ் கௌபா தலைமையில் இரண்டு உயர் அதிகார குழுக்களை அமைத்துள்ளது.
ஒரு குழுவானது விக்ஸித் பாரத் இலக்குகளை அடைவதிலும், மற்றொன்று நிதி சாராத துறையில் ஒழுங்குமுறை சீர்திருத்தங்களிலும் கவனம் செலுத்துகிறது.
அமைச்சரவைச் செயலாளர் TVS சுவாமிநாதன் தலைமையிலான ஒரு தனிக் குழு, மாநில அளவில் கட்டுப்பாடுகளை நீக்குவதில் பணியாற்றி வருகிறது.
இக்குழுக்களின் உறுப்பினர்களில் DPIIT, செலவினம், MSME மற்றும் மின்சார அமைச்சகங்களின் செயலாளர்கள், CII, FICCI மற்றும் ASSOCHAM ஆகியவற்றின் இயக்குநர்கள் அடங்குவர்.
பவன் கோயங்கா, மணீஷ் சபர்வால் மற்றும் ஜன்மேஜய் சின்ஹா போன்ற தொழில்துறைத் தலைவர்களும் இந்தக் குழுக்களின் ஓர் அங்கமாக உள்ளனர்.