இராணி சென்னம்மாவின் கிளர்ச்சியின் 200வது ஆண்டு நினைவு தினம்
February 27 , 2024 688 days 510 0
முன்னாள் சுதேச அரசான கர்நாடகா மீது படையெடுப்பதற்காக சுமார் 20,000 ஆங்கிலேயர்களைக் கொண்ட படையானது, கித்தூர் கோட்டையின் அடிவாரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.
ஆனால் கித்தூர் ராணி சென்னம்மா தனது தாயகத்தைப் பாதுகாப்பதற்காக வேண்டி ஆங்கிலேய அதிகாரியை எதிர்த்து நின்று கொன்றார்.
இது 1824 ஆம் ஆண்டின் கித்தூர் கிளர்ச்சி என்று அறியப் பட்டது.
கித்தூர் ஆட்சியாளர் 1824 ஆம் ஆண்டில் அவர் இறப்பதற்கு முன், சிவலிங்கப்பா என்ற குழந்தையை தனது வாரிசாக ஏற்றுக் கொண்டார்.
எனினும், ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் ஆனது, ‘வாரிசு இழப்புக் கோட்பாட்டின்’ கீழ் சிவலிங்கப்பாவை அந்த ராட்சியத்தின் வாரிசாக அங்கீகரிக்க மறுத்தது.