இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்களின் சந்திப்பு
June 3 , 2018 2781 days 940 0
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடுகளை உண்மையாகவும் உளப்பூர்வமாகவும் நிறுத்தும் நோக்கில் 2003-ம் ஆண்டு கையெழுத்திட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்திட ஒப்புக் கொண்டுள்ளனர்.
இரண்டு இராணுவ தளபதிகளும் ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைக் கோடு ஆகிய பகுதிகளில் நிலவும் சூழ்நிலையை மறுஆய்வு செய்தனர்.
பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் சிறப்பு தொடர்பு வசதியை ஏற்படுத்தியுள்ளார்.