இராணுவ மருந்துகள் மீதான கருத்தரங்கு: SCO உறுப்பு நாடுகள்
September 8 , 2019 2172 days 599 0
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் (Shanghai Co-operation Organisation - SCO)சேர்ந்த உறுப்பு நாடுகளுக்கான இராணுவ மருந்துகள் மீதான கருத்தரங்கானது புது தில்லியில் நடத்தப்பட இருக்கின்றது.
SCO பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டம் 2019-20ன் கீழ் இந்தியாவினால் நடத்தப்பட விருக்கும் “முதலாவது இராணுவ ஒத்துழைப்புக் கருத்தரங்கு” இதுவாகும்.
SCO உறுப்பு நாடுகள் மூத்த இராணுவ மருத்துவப் பயிற்சியாளர்களால் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விருக்கின்றன.
2017 ஆம் ஆண்டில் இந்தியா SCOல் உறுப்பு நாடாக இணைந்தது.
இக்கருத்தரங்கானது ஒருங்கிணைக்கப்பட்ட பாதுகாப்புப் பணியாளர் தலைமையகத்தின் கீழ் உள்ள இந்திய ஆயுதப் படையினால் நடத்தப்பட விருக்கின்றது.