2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 09 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபை The Security We Need: Rebalancing Military Spending for a Sustainable and Peaceful Future என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
உலகளாவிய இராணுவச் செலவினம் 2024 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக 2.7 டிரில்லியன் டாலரை எட்டியது, இது 2023 ஆம் ஆண்டு அளவை விட 9% அதிகமாகும்.
இந்தப் போக்குகள் தொடர்ந்தால் 2035 ஆம் ஆண்டில் இராணுவச் செலவினம் 6.6 டிரில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் இராணுவ வரவு செலவுத் திட்டங்கள் ஆனது நிலையான மேம்பாட்டு இலக்குகளிலிருந்து (SDG) வளங்களை உபயோகிக்கின்றன.
2022 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இராணுவச் செலவு 2.2 சதவீதத்திலிருந்து 2.5% ஆக அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் இராணுவச் செலவினங்களை அதிகரித்தன.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இராணுவச் செலவினங்களில் 1% அதிகரிப்பு, பொதுச் சுகாதாரச் செலவினங்களை சுமார் சமமான அளவில் குறைக்கிறது.
இராணுவச் செலவினங்களில் 15% மறு ஒதுக்கீடு செய்வது வளர்ந்து வரும் நாடுகளில் பருவநிலை மாற்றத்திற்கு நிதியளிக்கும்.