இராணுவத்தின் வான் பாதுகாப்பு படை – 25 வது நிறுவன தினம்
January 11 , 2018 2746 days 867 0
கடந்த ஜனவரி 10 ஆம் தேதி இந்திய இராணுவத்தின் வான் பாதுகாப்புப் படையின் (Army Air Defence) 25-வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது.
பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக்காலத்தில் 1939-ஆம் ஆண்டு முதன் முதலாக ஏற்படுத்தப்பட்ட இராணுவ வான் பாதுகாப்புப் படையானது இரண்டாம் உலகப் போரில் தீவிரமாக பங்குபெற்றது.
இருப்பினும் 1994 ஆம் ஆண்டின் ஜனவரி 10ஆம் தேதியிலிருந்து தன்னதிகார அங்கீகாரத்தோடு (Autonomous Status) இராணுவ வான் பாதுகாப்புப் படை செயல்படத் தொடங்கியது.
இந்தியாவின் வான் பரப்பை குறிப்பாக 5000 அடிக்கு கீழான வான் பரப்பில், எதிரிகளின் விமானங்களிலிருந்தும், ஏவுகணைகளிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பதை பணியாகக் கொண்ட இந்திய இராணுவத்தின் ஒரு துடிப்பான வான் படையே இராணுவ வான் பாதுகாப்புப் படையாகும்.
‘அகாஷே ஷத்ருன் ஆஹி’ (AKASHE SHATRUN JAHI- Kill The Enemy in Sky- எதிரிகளை வான் பரப்பிலே அழித்தல்) என்பதே இதன் மந்திரமாகும்.