TNPSC Thervupettagam

இராணுவப் பணிகளில் பாலின வரம்பு

August 15 , 2025 6 days 57 0
  • இந்திய இராணுவத்தின் தலைமைச் சட்ட அதிகாரி (JAG) பிரிவில் பெண்களின் இட ஒதுக்கீடுகளை வரையறுக்கும் கொள்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
  • 1950 ஆம் ஆண்டு இராணுவச் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ், படையில் பெண்கள் இணைவதற்கு அனுமதிக்கப்பட்டவுடன் இராணுவம் ஆனது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • ஆண்களுக்கு ஆறு இடங்களும் பெண்களுக்கு மூன்று இடங்களும் மட்டுமே ஒதுக்கும் இந்தக் கொள்கையானது, அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 16 ஆகிய சரத்துகளை மீறியது.
  • நீதிமன்றம் ஒரு பொதுவான தகுதிப் பட்டியலை உத்தரவிட்டது, அதில் தகுதியான பெண்களுக்கு 50% இடங்களுக்குள் தான் இட ஒதுக்கீடு என்று வரம்பிடப்படக் கூடாது என்று கூறியது.
  • இராணுவச் சட்டத்தின் 12வது பிரிவு, மத்திய அரசானது அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம், குறிப்பிட்ட படைப்பிரிவுகள், துறைகள் அல்லது கிளைகளைத் தவிர, வழக்கமான இராணுவத்தில் சேரவோ அல்லது வேலை செய்யவோ பெண்கள் தகுதி ற்றவர்கள் என்று கூறுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்