TNPSC Thervupettagam

இராணுவப் பண்ணை

April 5 , 2021 1502 days 605 0
  • இந்திய இராணுவமானது, 132 வருட சேவைக்குப் பிறகு இராணுவப் பண்ணையினை மார்ச் 31 அன்று மூடியுள்ளது.
  • பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த காவற்படை வீரர்களுக்குச் சுகாதாரமான பசும்பால் வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட பண்ணைகளே இராணுவப் பண்ணைகளாகும்.

முக்கிய தகவல்கள்

  • பண்ணைகளில் இருந்த தொழிலாளர்கள் அந்த அமைப்பிற்குத் தொடர்ந்து சேவையை வழங்க வேண்டும் என்பதற்காக அந்த அமைச்சகத்திற்குள்ளேயே அவர்கள் மீண்டும் பணியமர்த்தப் படுவார்கள்.
  • 2012 ஆம் ஆண்டில் Quarter Master General என்ற பிரிவானது இந்தப் பண்ணைகளை மூடுவதற்குப் பரிந்துரை செய்தது.
  • இதன் பிறகு 2016 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதத்தில் துணைநிலைப் படைத்தலைவர் DB சேகாட்கர் (ஓய்வு) தலைமையிலான குழுவும் இப்பண்ணைகளை மூடுவதற்கு பரிந்துரை செய்தது.
  • முதல் இராணுவப் பண்ணையானது அலகாபாத்தில் 1889 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 அன்று அமைக்கப்பட்டது.
  • சுதந்திரத்திற்கு பிறகு 30,000 மாடுகளுடன் இந்தியா முழுவதும் 130 பண்ணைகள் உருவாக்கப் பட்டன.
  • 1990 ஆம் ஆண்டுகளில் லே மற்றும் கார்கில் ஆகிய பகுதிகளிலும் கூட இந்தப் பண்ணைகள் அமைக்கப் பட்டன.
  • இராணுவக் குடியிருப்புகள் நகர்ப்புறப் பகுதியிலிருந்து சற்று தொலைவில் அமைந்திருந்ததால் இந்தப் பண்ணைகள் அவசியமானதாக இருந்தது.
  • தற்போது நகரங்களின் விரிவாக்கத்தால் இராணுவக் குடியிருப்புகளும் நகரங்களுக்கு அருகில் வந்து அமைந்துள்ளன.
  • இதனால் திறந்தவெளிச் சந்தைகளிலிருந்தே அதிகளவில் பால் கொள்முதல் செய்யப் பட்டு வருகிறது.
  • பல வருடங்களாக பண்ணையின் நிர்வாகத்தில் நிலவும் பல ஊழல் குற்றச்சாட்டுகளும் இந்தப் பண்ணைகள் மூடப்பட்டதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும்.
  • இந்தப் பண்ணைகள் 1971 ஆம் ஆண்டு போரின் போது மேற்கத்திய மற்றும் கிழக்கத்தியப் படைகளுக்கும், கார்கில் போரின் போது வடக்கிலிருந்தப் படை வீர்களுக்கும், பால் வழங்கி ஒரு மகத்தான சேவையை நல்கின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்