பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இராணுவப் போர் பயன்பாட்டுப் பாராசூட் /வான்குடை மிதவை அமைப்பு (MCPS) ஆனது இந்திய விமானப் படையால் 32,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
MCPS என்பது இந்திய ஆயுதப் படைகளால் செயல்பாட்டு ரீதியாக பயன்பாட்டில் உள்ள ஒரே பாராசூட் அமைப்பாகும் என்ற நிலையில்இது 25,000 அடி உயரத்திற்கு மேல் பயன்படுத்தப்படக் கூடியது.
இது குறைந்த இறங்கு விகிதம், அதிக திசைமாற்றம் மற்றும் இந்தியச் செயற்கைக் கோள் திரளின் வழிசெலுத்தல் (NavIC) அமைப்பினைப் பயன்படுத்தி துல்லியமான வழி செலுத்தல் போன்ற மேம்பட்ட உத்தி சார் திறன்களைக் கொண்டுள்ளது.