TNPSC Thervupettagam

இராஷ்ட்ரிய போஷன் மா 2025

October 24 , 2025 12 days 46 0
  • 8வது இராஷ்ட்ரிய போஷன் மா (2025) நிகழ்வானது டேராடூனில் ஊட்டச்சத்து மற்றும் அதிகாரமளிப்பை மையமாகக் கொண்டு நிறைவடைந்தது.
  • போஷன் மா நிகழ்வில் ஆண்களின் ஈடுபாடு, உள்ளூர் உணவுகள் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட ஆறு முக்கிய கருத்துருக்களைக் கொண்டு நிகழ்ந்தது.
  • அங்கன்வாடி சேவைகள் ஆனது, இந்தியா முழுவதும் 14 லட்சம் மையங்கள் மூலம் 9 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சேவை வழங்குகின்றன.
  • போஷன் டிராக்கர் செயலி ஊட்டச்சத்து சேவை வழங்கலில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தியுள்ளது.
  • உள்ளூர் சிறு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை சத்தான மற்றும் பருவ நிலைக்கு ஏற்ற உணவுகளாக ஊக்குவிப்பதை உத்தரகாண்ட் அரசு வலியுறுத்தியது.
  • கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தொகுப்புகளின் இலவச விநியோகம் மற்றும் டிஜிட்டல் வழி ஆதரவு வழங்கலை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
  • 2047 ஆம் ஆண்டிற்குள் 'சுபோஷித்' (ஊட்டச்சத்து மிக்க) மற்றும் 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) ஆகியவற்றை உருவாக்குவதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்