குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான இராஷ்ட்ரிய விஞ்ஞான புரஸ்கார் விருதை புது டெல்லியின் இராஷ்டிரபதி பவனில் வழங்கினார்.
விக்யான் ரத்னா, விக்யான் ஸ்ரீ, விக்யான் யுவா மற்றும் விக்யான் குழு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் மொத்தம் 24 விருதுகள் வழங்கப்பட்டன.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், வேளாண்மை, அணு ஆற்றல் மற்றும் விண்வெளி அறிவியல் உள்ளிட்ட சுமார் 13 அறிவியல் துறைகளில் மேற்கொள்ளப்பட்டப் பங்களிப்புகளுக்கு விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டன.
வாழ்நாள் சாதனைகளுக்காக இயற்பியலாளர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகருக்கு அவரது மரணத்திற்குப் பின்னதாக விக்யான் ரத்னா விருது வழங்கப்பட்டது.
எட்டு அறிவியலாளர்கள் விக்யான் ஸ்ரீ விருதையும், பதினான்கு இளம் அறிவியலாளர்கள் விக்யான் யுவா விருதையும், ஒரு குழு விக்யான் குழு விருதையும் பெற்றனர்.
இராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார் என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் மிகவும் உயரிய தேசிய விருதாகும் என்பதோடுஇது பத்ம விருதுகளைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.