TNPSC Thervupettagam

இரு குழந்தை நெறிமுறை குறித்த உச்ச நீதிமன்ற விளக்கம்

November 13 , 2026 2 days 48 0
  • இந்தியாவின் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்தைக் குறிப்பிட்டு, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றதற்காக மக்களை தண்டிக்கும் சட்டங்களின் பொருத்தம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
  • இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 3-இல் இருந்து 1.9 ஆகக் குறைந்துள்ளது, இது மாற்று கருவுறுதல் விகிதமான (replacement fertility rate) 2.1-க்குக் குறைவாகும்.
  • மாற்று விகிதமான 2.1 என்பது ஒரு தலைமுறை தன்னைத் தானே மாற்றிக் கொள்ள ஒரு பெண்ணுக்குத் தேவைப்படும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையாகும்.
  • குறையும் கருவுறுதல் விகிதமானது முதியோர் மக்கள் தொகை அதிகரிக்கவும், உழைக்கும் மக்கள் தொகையின் பங்கு குறையவும் வழிவகுக்கும் என்று நீதிமன்றம் எச்சரித்தது.
  • நீதிபதி பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வு, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தையும், சரத்து 21-இன் கீழ் மகப்பேறு மீதான தனிப்பட்ட விருப்ப உரிமையையும் (reproductive autonomy) கட்டுப்படுத்தலாம் என்று கவனித்தது.
  • தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி நிபந்தனையாக இரு குழந்தை நெறிமுறையைத் தொடருவது குறித்த சட்டப்பூர்வ கேள்வியை நீதிமன்றம் ஒரு பெரிய அமர்வுக்கு மாற்றியது.
  • அது, ஜாவேத் எதிர் ஹரியானா அரசு வழக்கில் 2003-ல் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனைக்காக ஒரு பெரிய அமர்வுக்குப் பரிந்துரைத்தது.
  • தற்போதைய வழக்கின் பெயர்: மங்களா பீம்ராவ் இங்ளே எதிர் கூடுதல் ஆணையர், அமராவதி கோட்டம் மற்றும் பிறர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்