TNPSC Thervupettagam

இருதரப்பு கடற்படைப் பயிற்சி – இந்தியா மற்றும் வியட்நாம்

August 21 , 2021 1448 days 551 0
  • இந்தியக் கடற்படை மற்றும் வியட்நாம் நாட்டினுடைய மக்களின் கடற்படை ஆகியவை இணைந்து தென் சீனக் கடலில் ஓர் இருதரப்புக் கடற்படைப் பயிற்சியினை மேற்கொண்டன.
  • இரு கடற்படைகளுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இப்பயிற்சியானது மேற்கொள்ளப் படுகிறது.
  • இந்தியா சார்பாக INS ரன்விஜய் மற்றும் INS கோரா ஆகிய கப்பல்கள் இப்பயிற்சியில் ஈடுபடுகின்றன.
  • வியட்நாட் சார்பாக VPNS லி தாய் தோ (HQ – D12) எனும் போர்க்கப்பலானது இப்பயிற்சியில் ஈடுபடுகிறது.
  • இந்த இருதரப்புப் பயிற்சியானது இரு கடற்படைகளுக்கும் இடையேயான வலுவான பிணைப்பினை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டதும், இந்தியாவியட்நாம் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்குமான மற்றொரு படியாகவும் கருதப்படுகிறது.
  • இந்தியக் கடற்படைக் கப்பல்கள் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தினை வியட்நாமில் கொண்டாடியது, இந்தப் பயிற்சியின் ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்