இருதரப்பு கடற்படைப் பயிற்சி – இந்தியா மற்றும் வியட்நாம்
August 21 , 2021 1460 days 557 0
இந்தியக் கடற்படை மற்றும் வியட்நாம் நாட்டினுடைய மக்களின் கடற்படை ஆகியவை இணைந்து தென் சீனக் கடலில் ஓர் இருதரப்புக் கடற்படைப் பயிற்சியினை மேற்கொண்டன.
இரு கடற்படைகளுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இப்பயிற்சியானது மேற்கொள்ளப் படுகிறது.
இந்தியா சார்பாக INS ரன்விஜய் மற்றும் INS கோரா ஆகிய கப்பல்கள் இப்பயிற்சியில் ஈடுபடுகின்றன.
வியட்நாட் சார்பாக VPNS லி தாய் தோ (HQ – D12) எனும் போர்க்கப்பலானது இப்பயிற்சியில் ஈடுபடுகிறது.
இந்த இருதரப்புப் பயிற்சியானது இரு கடற்படைகளுக்கும் இடையேயான வலுவான பிணைப்பினை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டதும், இந்தியா – வியட்நாம் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்குமான மற்றொரு படியாகவும் கருதப்படுகிறது.
இந்தியக் கடற்படைக் கப்பல்கள் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தினை வியட்நாமில் கொண்டாடியது, இந்தப் பயிற்சியின் ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.