இருப்பிடத்தை (வாழும் இடம்) அடிப்படையாகக் கொண்டு பணி இட ஒதுக்கீடு
August 25 , 2020 1943 days 837 0
சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநில முதல்வரான சிவராஜ் சிங் சௌகான் அவர்கள் அந்த மாநிலத்தின் அரசுப் பணிகள் அனைத்தும் “அம்மாநிலத்தின் மைந்தர்களுக்கு” மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஆனால் இந்திய அரசியலமைப்பின் பின்வரும் சரத்துகள் பிறப்பிடத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்கின்றது.
சரத்து 16 : இந்த சரத்தானது பிறப்பிடம் அல்லது இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலங்கள் அரசு வேலைவாய்ப்பு விவகாரங்களில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்கின்றது.
சரத்து 16(2) : இது ஒரு மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பு (அ) பதவியைப் பொறுத்த வரையில் எந்தவொரு குடிமகன்களும் மதம், இனம், சாதி, பாலினம், வம்சாவளி, பிறப்பிடம், இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப் படக் கூடாது என்று கூறுகின்றது.
சரத்து 16(3)-ல் உள்ள விதிவிலக்கு : இந்தப் பிரிவானது எந்தவொரு மாநிலத்திலும் அரசுப் பணிகளுக்காக வேண்டி “இருப்பிடம்” குறித்து குறிப்பிடப் பட்டுள்ள ஒரு சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றலாம் என்ற விலக்கு அளித்துள்ளது.
எனினும், இது நாடாளுமன்றத்தால் மட்டுமே மேற்கொள்ள முடியும். இதனை மாநிலச் சட்டமன்றங்கள் மேற்கொள்ள முடியாது.